Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

விவாகரத்து

 கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பதெல்லாம் இன்றைய காலத்தில் வெறும் வாய் வார்த்தைகள் தான். ஆனால் அன்றைய காலங்களில் பெண்களை வளர்க்கும் போதே நாளை போக போற வீட்டில இப்படி மகாராணி மாதிரி எல்லாம் இருக்க முடியாது எல்லா வேலையும் நீ தான் பார்க்கணும் இப்பவே ஒழுங்கா கத்துக்க அப்படி தான் அம்மா திட்டி திட்டி வளர்த்தாள்.

பெண் வாழ்வில் என்ன படித்து தெரிந்திருக்க வேண்டுமென்றால் சமையல் தான். ஆனால் இன்றைய காலம் எத்தனையோ மாறியுள்ளது. ஆண்கள் செய்யும் தொழில் முதல் அவர்கள் அடிமட்டத்தில் செய்யும் சுமை தூக்கும் பணி கூட பெண்கள் செய்கிறார்கள். 

இது அவர்களுக்கு சவாலானா செயலா என்றால் இல்லை. அவர்களால் இதை மிஞ்சி பயணிக்க முடியும் என்று அறிந்த ஆண்கள் அன்றைய காலத்திலேயே அவர்களை அடிமைகளாகவும், ஒரு ஆபாச கண்காட்சிகளாகும், சிற்றின்ப போதை வஸ்துக்களாகவும் தங்கள் தேவைக்கு அவர்களை மாற்றி வைத்துக் கொண்டனர்.

அவளுக்கு இன்றளவும் முழு சுகந்திரம் கொடுக்கப் படவில்லை. நாம் மீடியாவில் பார்ப்பது தான் உலகம் என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல. 

நாம் மீடியாவில் பார்க்கும் பெண்களும் கூட பல போராட்டம் கடந்து தான் இன்றைய நிலையை அடைந்துள்ளனர். அவர்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகள் தான் இன்றைய கிராமப் புறப் பெண்களை பெண் அடிமைத் தனைத்தில் இருந்து வெளி வரச் செய்திருக்கிறது. 

ஆனால் அதற்கும் விவாகரத்துக்கும் என்ன சம்பதம் இருக்கிறது என்றால்! என்னை பொறுத்த வரை விவாகரத்து கோரும் பெண்கள் எல்லாம் சுகந்திரத்தை விரும்புகிறார்கள் என்று தான் அர்த்தம். 



அல்லது ஆணின் பிற பெண்களுடான தொடர்பு, உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என்ற அகத்தூண்டல் கொண்ட கேள்விகள் தான்.

இன்றைய காலங்களில் பல விவாகரத்து என்பது நடந்தாலும் நமக்கு தெரிவது பல சினிமா நாயகர்களின் விவாகரத்துத் தான். 

அவர்கள் எடுக்கும் முடுவு சரியா தவறா என்ற ஆராட்சிக்கு நாம் போக வேண்டாம் என்றாலும். நடுத்தர குடும்பத்தில் வாழும் பல பெண்கள் இன்றைய சூழ்நிலையை பார்த்து அவர்களுக்குள் எழும் சின்ன குழப்பங்களுக்கும் தீர்வு காணாமல் உடனடியாக விவாகரத்து வாங்கி விட வேண்டும் என்ற மன நிலையில் உள்ளனர்.

அத்தகைய எண்ணம் கொண்டவர்கள் இது போன்ற பிரபலங்களின் விவாகரத்து செய்தி அவர்களை உடனடி தீர்மானம் எடுக்க வைக்கிறது.

ஒரு பெண் காலம் முழுவதும் ஒருவனை மாத்திரம் தான் சார்ந்து இருக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை. ஆண்கள் பல பெண்களுடன் உல்லாசம் கொள்வதுபோல இன்றைய பெண்களும் தங்கள் வாழ்வியல் சூழலை அப்படி மாற்றிக் கொண்டார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 

தனித் தனி உணர்வுள்ள மனிதர்களுக்கு பொதுவான வாழ்வியல் சூழல் ஏற்றதல்ல ஆனாலும் சமூகம் அந்த சூழலை சட்டம் என்று வகுத்து வைக்கும் பட்சத்தில் அனைவரும் சட்டத்தின் விதிமுறையை மதிப்பது போல, மறைமுக உறவில் ஈடு படுகின்றனர் அவ்வளவு தான். 

மனித மனம் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தவிப்பது. அது இருப்பதை கொண்டு வாழ நினைப்பது இல்லை. அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்.

முந்தைய காலங்களில் இந்த வேறுபாடு பக்கத்து வீட்டுக் காரர்களுடன் இருந்து வந்தது. நான்கு பெண்கள் கூடி என்னடி சாவுத்திரி புது கம்மல் வாங்கிருக்கா உன்னோட புருஷன் ஒன்னும் உனக்கு வாங்கி தரலியா என்றதும் பதிலுக்கு ரேவதி அவளுக்கு என்ன அவள் புருஷன் அரசாங்க உத்தியோகம். என்னோட புருஷனுக்கு கூலி வேலை தானே அவரு வேலைக்கு போய்ட்டு வந்து கலைப்புல தூங்கிடுறாரு, என்னோட சந்தோசமா இருந்தே ரொம்ப நாள் ஆச்சி

இதுல ஒட்டியாணம் மூக்குத்தி எல்லாம் எதுக்கு. ஒரு நாள் என்னோட சந்தோசமா இருந்தா போதும் என்றாள். கோமதி ரேவதியிடம் என்னோட புருஷன் தம்பி எப்பவும் வெடப்பா தான் திரியுறான் உன் வீட்டுக்கு அனுப்பி வைக்கவா என்ற கோமதியின் கன்னத்தில் செல்லமாக அறைந்து ஒருவருக்கொருவர் சிரித்துக் கொள்கிறார்கள். 

அன்றைய சூழ்நிலை வேறு இன்றைய சூழ்நிலை வேறு. காலத்தோடு பயணிப்பது என்பது மட்டுமே நன்மை.

ஆனால் விவாகரத்து ஒரு தீர்வாகாது, அனைத்துப் பிரச்சனைகளுக்கும். கொஞ்சம் அனுசரித்து நம் நிலமையை கணவனுக்கு புரிய வைக்கலாம். ஏதும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் எதிர்தரப்பு இக்லையென்றான பொழுது அதன் பிறகான முடிவு அவரவர் தனிப் பட்ட முடிவாக இருக்க வேண்டும். யாருடைய இடை சொருகலும் இருக்கக் கூடாது. 

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...